
- வான் கோழி கிரேவி
தேவையான பொருட்கள் :
* வான் கோழி இறைச்சி அரை கிலோ
* காய்ந்த மிளகாய் 4
* பூண்டு பல் 5
* இஞ்சிசிறிய துண்டு
* மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
* சீரகம் அரை டீஸ்பூன்
* சோம்புஅரை டீஸ்பூன்
* மிளகு3 டீஸ்பூன்
* பட்டை 1
* பிரிஞ்சி இலை1
* கறிவேப்பிலை 1 கொத்து
* தேங்காய் துருவல்1
* சின்ன வெங்காயம்20
* நெய் 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய்தேவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு1 டேபிள் ஸ்பூன்
* உப்பு தேவைக்கேற்ப
செய்முறை :
தேங்காயை அரைத்து முதல் பால் எடுக்கவும். பின் மீண்டும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து இரண்டாவது பால் எடுக்கவும். இறைச்சியைக் கழுவி நறுக்கிக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் இல்லாமல் காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு ஆகியவற்றை வறுக்கவும்.
பின் ஆற வைத்து பொடியாக்கி கொள்ளவும். கடாயில் நெய் விட்டு இறைச்சி, இஞ்சி, பூண்டு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, வறுத்து அரைத்த பொடி சேர்த்து வதக்கவும். பின் இரண்டாவதாக பிழிந்த தேங்காய் பால், எலுமிச்சை சாறு, உப்பு ஆகியவற்றையும் சேர்த்து கிளறி மூடி நன்றாக வேக விட வேண்டும்.
கறி ஓரளவு வெந்ததும் முதல் தேங்காய் பால் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும். பிறகு மற்றொரு கடாயில் நெய் விட்டு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் எடுத்த வைத்த இறைச்சியை அதில் போட்டு குழம்பு கெட்டியானதும் இறக்கவும். இப்போது சுவையான வான் கோழி கிரேவி தயார்..