
வாயில் எண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதால் இவ்வளவு நன்மைகளா..??
அன்றாட வாழ்க்கையில் பல் துலக்குவது என்பது எவ்வளவு அவசியமான ஒன்றோ அதே மாதிரி தான் வாய் கொப்பளிப்பதும். இந்நிலையில் எண்ணெய் பயன்படுத்தி வாய் கொப்பளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
நல்லெண்ணெய் கொண்டு வாயை கொப்பளித்து வந்தால் உமிழ்நீரின் காரத்தன்மை பாதுகாக்கப்படும் மற்றும் வாயில் இருக்கும் மென் திசுக்களின் மூலமாக உறிஞ்சப்பட்டு ரத்த ஓட்டத்தில் இது கலந்து நன்கு செயல்படும்.
தினமும் நல்லெண்ணெய் பயன்படுத்தி 10 நிமிடம் வாயை கொப்பளிப்பதால் வாயில் எந்த ஒரு துர்நாற்றமும் இருக்காது மற்றும் தொண்டை வறட்சி வாய் புண் மற்றும் நாக்கில் ஏற்படும் புண்கள் அதிகமான அளவிற்கு உமிழ்நீர் சுரப்பது மற்றும் குறைவாக அளவிற்கு உமிழ்நீர் சுரப்பது போன்ற அனைத்து பிரச்சனைகளும் இதன் மூலம் சரி செய்யலாம்.