வாயில் வைத்ததும் கரைந்தோடும் கேரளா ஸ்பெஷல் “பணியாரம்” ..!!செய்வது எப்படி..?

கேரள மக்கள் பச்சரிசி மாவில் பணியாரம் செய்து சாப்பிடுவதை வழக்கமாய் கொண்டுள்ளனர். அதிலும் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இந்து இனிப்பு பணியாரத்தை தேங்காய் எண்ணெயில் செய்து சாப்பிட்டால் வாயில் வைத்ததும் கரைந்தோடும் சுவையில் இருக்கும்.

பணியாரம் செய்வது எப்படி..?

தேவையான பொருட்கள்

  1. பச்சரிசி -1கப்
  2. சர்க்கரை -3/4கப்
  3. நான்கு வடித்த சாதம்- 1 கப்
  4. தேங்காய் எண்ணெய்- தேவைக்கேற்ப
  5. உப்பு- 1 சிட்டிகை
  6. சமையல் சோடா- 1 சிட்டிகை

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு பச்சரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் அரிசி மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நான்கு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் ஊற வைத்துள்ள பச்சரிசியை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து 3/4 கப் சர்க்கரை, 4 ஏலக்காய் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும், அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும் அதில் சிறிதளவு உப்பு  மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கையால் நன்கு கலந்து விடவும் இதை எட்டு மணி நேரம் வரை ஊற விட வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பணியாரக் கல் வைத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதில் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி நன்கு சிவக்க விட்டு எடுக்க வேண்டும் .இவ்வாறு செய்தால் இனிப்பு பணியாரம் சுவையாக இருக்கும். இந்த தித்திக்கும் பணியாரம் கேரள மக்களின் ஸ்பெஷல் உணவு வகைகளில் ஒன்று ஆகும்.

Read Previous

தீராத நாள்பட்ட நெஞ்சு சளியை ஐந்தே நிமிடத்தில் குணமாக்கும் அற்புத மருந்து..!!

Read Next

பைட் க்ளப் படத்திற்கு ‘A’ சான்றிதழ் வழங்கிய தணிக்கைக்குழு: படக்குழு அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular