படித்து முடித்த பின்னர் பணி கிடைக்காமல் இருப்பவரைக் கண்டு வாய்ப்புகள் கிடைக்கும் வரையில் காத்திருக்காதே உனக்கான வாய்ப்பினை தேடி செல் என்று கூறுவார்கள் இன்னும் சிலர் வாய்ப்புகளைத் தேடிப் போவதை விட அதனை நாமே உருவாக்கிக் கொண்டால் வெற்றி நிச்சயம் என்று கூறுவார்கள்…
ஒரு சிலருக்கு அவரவர் ஆசைப்பட்டதற்கேற்ப வாய்ப்புகள் அமையும் அதற்கு அவர்களது திறமை கூட ஒரு காரணமாக இருக்கலாம் ஆனால் இன்னும் சிலருக்கு திறமை இருந்தும் தக்கவாய்ப்புகள் கிடைக்காமல் நழுவி செல்லும்..
அப்படி வாய்ப்புகள் நமது கையை விட்டு செல்லும் நிலையில் அதனை நினைத்து வருந்தி மன அழுத்தம் ஏற்பட்டு சோர்ந்து போவதுண்டு ஆனால் நாம் அவ்வாறு துவண்டு விட்டால் கண் முன்னே இருக்கும் வேறு சில வாய்ப்புகளையும் நாம் இழக்க நேரிடும்..
ஒரு பள்ளி படிப்பை முடித்த இடன் தனது குடும்ப கஷ்டத்திற்காக ஒரு ஐடி நிறுவனத்தில் தூய்மை பணிக்காக விண்ணப்பித்தான் அதன் பேரில் அவனுக்கு எச்ஆர் முன்னிலையில் ஒரு இன்டர்வியூ நடத்தப்பட்டது..
அப்போது பணிக்கு சரியாக வந்து விடுவாயா என்றும் முன் அனுபவம் இருக்கிறதா என்றும் கேள்வி எழுப்பி உள்ளார் அதற்கு அந்த இறைவன் சரியாக வந்து விடுவேன் இதில் எனக்கு முன் அனுபவம் இல்லை ஆனால் கற்றுக் கொள்வேன் என்று பதிலளித்தார்…
அவனின் பதிலை கேட்ட அந்த ஹெச் ஆர் அவனுக்கு வேலை வழங்க சம்மதித்தார் மேலும் அவனது வேலையை செய்கிறான் என்று பரிசோதிக்க இன்னொருவரையும் நியமித்தார். ஆனால் அவன் தன் வேலையில் முழு கவனத்தையும் செலுத்தி வேலையை செய்து வந்தான் அவனை கவனிப்பதற்கு அனுமதித்த இன்னொருவன் வேலை எதுவும் செய்யாமல் அவனை கவனித்து வந்தான். இதை உணர்ந்தவன் அந்த வேலையை விட்டு வெளியேறினான். நம்பிக்கை இல்லாத இடத்தில் வேலை செய்வதை விட நாமே வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று புதிய தொழில் ஒன்றை தொடங்கினான். அந்த தொழில் தொடங்கையில் சிறிது தொகையை வைத்து முதலீடு செய்தான் அவனது விடா முயற்சி அவனுக்கு பெரிய வாய்ப்புகளை தந்து தனி ஒருவன் இன்று தொழிலதிபராக முன்னேறி உள்ளார். நீங்களும் அப்படியே வாய்ப்புக்காக காத்திருக்காமல் வாய்ப்புகளை நீங்கள் உருவாக்கிக் கொள்ளுங்கள்..!!