வாய்ப்புண் பாடாய் படுத்துகிறதா..? கவலை வேண்டாம்..!! இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!!

வாய்ப்புண் என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு உபாதையாகும். வாய்ப்புண் ஏற்பட்டால் உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும்.

மேலும் பல் துலக்கும் போதும் கடுமையான வலி ஏற்படும் பொதுவாக வாய்ப்புண் உடல் உஷ்ணம், மன அழுத்தம் மற்றும் ஹார்மோன் மாற்றங்களை நான் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வாய்ப்புண் பொதுவாக இரண்டு வாரங்களில் சரியாகும் எனினும் அவற்றால் வாயில்  ஏற்படும் வலியில் இருந்தே நம்மை காத்துக் கொள்ள வீட்டிலேயே செய்யக்கூடிய சில கை வைத்திய முறைகளை பற்றி பதிவில் காணலாம்.

  1. வாய்ப்புண் ஏற்பட்டால் உப்பு நீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் அதனை சரி செய்யலாம். இதனால் வாயில் ஏற்படும் வலி மற்றும் வீக்கமும்  குறையும்.
  2. வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி கீரை ஒரு சிறந்த தீர்வாய் அமைகின்றது. இந்த கீரையை வாயில் போட்டு நன்றாக மென்று அரைத்த பிறகு சிறிது நேரம் வாயில் வைத்துவிட்டு பின்னர்  விழுங்குவதன் மூலம் வாய்ப்புண் குணமடையும்,
  3. மேலும் பாலில் சிறிதளவு தேன் கலந்து சாப்பிடுவதன் மூலமும் வாய் புண் குணமடையும்.
  4. இதை தவிர வாழைப்பூ வாய்ப்புண்ணிற்கு சிறந்த மருந்தாகும்.
  5. மேலும் பிளாக் டீ, தயிர் மற்றும் கிராம்பு ஆகியவற்றையும் வாய்ப்புண்ணிற்கு சிறந்த மருந்து சாதாரண வாய்ப்புண் என்றால் இந்த மருந்துகளை நாம் பயன்படுத்தலாம் வாய்ப்புண் நீண்ட நாட்களாக குணமடையாமல் இருந்தால் அது தொடர்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நன்று.

Read Previous

கோவிலுக்கு வரும் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமிரா..!! லைவ் வீடியோவில் பார்த்து ரசித்த பயங்கரம்.!!

Read Next

ஷாக்கிங்… கெமிக்கல் ஸ்ப்ரேயில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழங்கள்..!! அவற்றால் ஏற்படும் பக்க விளைவுகள்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular