இன்றைய காலகட்டத்தில் பலரும் வாயு தொல்லை ஜீரணக் கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர் அப்படிப்பட்டவர்களுக்கு சிறந்த தீர்வாக இருப்பது சீரக தண்ணீர் தான், சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும் கிடைக்கிறது..
சில பேருக்கு வயிற்று வலி வயிற்று வீக்கம் நெஞ்செரிச்சல் என மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கும், அப்படி அதிகப்படியான வாயு வயிற்றில் தங்குவதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகிறது, இதற்கு எளிய தீர்வு இதோ சீரக தண்ணீர் வாய்வு தொல்லையை போக்க சிறந்த மருந்தாகும் சீரகம் நமது உமிழ் நீரை அதிகமாக சுரக்க செய்து உணவை எளிதாக ஜீரணிக்க வைக்கிறது, ரெண்டு ஸ்பூன் சீரகத்தை ரெண்டு கப் தண்ணீர் போட்டு 15 நிமிடம் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள் உணவு சாப்பிட்ட பிறகு குடித்து வந்தால் வாய்வு பிரச்சனை விரைவில் தீரும், மேலும் சாப்பிடும் செரிமானம் ஆகாமல் இருப்பது போல் தோன்றினால் ஜீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் விரைவில் செரிப்பு தன்மை ஏற்படும்..!!




