வாய் தகராறில் வேன் ஏற்றி கொலை முயற்சி, 3 பேர் படுகாயம்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நடுவதியம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கண்ணன் (29). இவர் பேக்கரி மாஸ்டராக வேலை பார்த்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் கீழவதியம் பகுதியில் உறவினர் ஒருவர் இறந்ததற்கு சுடுகாட்டிற்கு செல்ல வேண்டி கண்டியூரைச் சேர்ந்த நிர்மல் குமார் என்பவரின் வாகனத்தில் ஃபோக்கஸ் லைட்டை கட்டிக் கொண்டு வர கூறியுள்ளனர்.

வெளிச்சம் குறைவாக இருப்பது குறித்து கேட்டதற்கு இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு வேனை கண்ணன் மீதும் அங்கிருந்தவர்கள் மீதும் மோதிவிட்டு சென்றுள்ளார். இதில் கண்ணன், அன்பழகன், பூபதி ஆகிய மூன்று பேரும் காயம் ஏற்பட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கண்ணன் கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து கண்ணன் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் நிர்மல் குமார் மீது நேற்று வழக்குப்பதிந்து விசாரணை செய்கின்றனர்.

Read Previous

மரவள்ளி கிழங்கு வைத்து அருமையான காரசாரமான அடை ரெசிபி..!!

Read Next

சிவகங்கையில் பெண்கள் கபடி போட்டி..!! 12 மாநிலங்கள் பங்கேற்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular