
வாரத்திற்கு ஒரு முறை மது அருந்தினால் கூட இந்த பாதிப்பு ஏற்படுமாம்..!! குடிப்பழக்கம்..!!
குடிப்பழக்கம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்ற வாக்கியத்தின் அர்த்தம் தெரிந்தும் பல நபர்கள் இன்னும் அந்த குடியை மட்டும் விடவில்லை. இந்த குடிப்பழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து இருக்கிறது. பல குழந்தைகள் இளம் வயதிலேயே அவர்களின் அப்பாவை இழந்திருக்கிறார்கள். பல மனைவிகள் அவர்களின் கணவர்களை இழந்திருக்கிறார்கள். இருப்பினும் குடிப்பழக்கம் நாட்டில் அதிகமாகிக் கொண்டே தான் வருகிறது தவிர குறைந்த மாதிரி தெரியவில்லை. ஒரு சிலர் எனக்கு அந்த பழக்கமெல்லாம் அதிகம் கிடையாது வாரத்துக்கு ஒருமுறைதான் குடிப்பேன் என்று சொல்வார்கள். அவர்களுக்காகத்தான் இந்த பதிவு. கண்டிப்பா இந்த பதிவை படிச்சு தெரிஞ்சுக்கோங்க.
கல்லீரல் என்பது மனித உடலில் உள்ள உறுப்புகளில் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்தக் கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ அல்லது கல்லீரல் செயல் இழந்துவிட்டாலோ உயிர் போகும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் பாதிப்பு என்பது அதிகமாக ஆல்கஹால் குடிப்பவர்களுக்கு தான் வருகிறது. என் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகம் குடிப்பதால் கல்லீரலில் கொழுப்புகள் அதிகம் சேர்ந்து கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. வாரத்திற்கு ஒரு முறை தானே மது அருந்துகிறோம் என கூறுபவர்களுக்கு கூட கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். கல்லீரல் பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறி என்னவென்றால் வயிறு வீக்கம். கல்லீரல் ஆனது பெரும் பாதிப்பிற்கு ஆளாகி இருந்தால் அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். கல்லீரல் பிரச்சனை உங்களுக்கு இருப்பதாக உணர்ந்தால் முதலில் அந்த குடிப்பழக்கத்தை நிறுத்துங்கள். உடனே மருத்துவரை சந்தியுங்கள்.