வாரம் இரண்டு முறை சாப்பிடுங்க கை கால் இடுப்பு வலி பறந்து போகும்..!!

கை, கால் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வருகிறீர்களா இனி கவலை வேண்டாம் ராகி உளுத்தம் பருப்பு வைத்து சுவையான கஞ்சி எப்படி செய்து இடுப்பு வலியை சரி செய்வோம் என்று பார்ப்போம்…

தேவையான பொருட்கள்
* ராகி
* உளுத்தம் பருப்பு
* வெள்ளம்
* தேங்காய் துருவல்
* ஏலக்காய் சுக்கு
செய்முறை : ஒரு கடாயில் அரை கப் அளவிற்கு கேழ்வரகு மீடியம் ஃப்ளேமில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும் லேசாக கலர் மாறி ஒரு நல்ல மனம் வரும் வரை வருக்க வேண்டும் பின்னர் இதனை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி ஆரம்பிக்க வேண்டும், அதே கடாயில் கருப்பு உளுந்து அல்லது வெள்ளை உளுந்து சேர்த்து அதன் வாசம் வரும்வரை வறுத்து ஆற வைக்கவும் பின்னர் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து வாசனைக்காக இரண்டு ஏலக்காய் சின்னதுண்டு சுக்கு சேர்த்து நன்கு மைய் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் இதனை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி ஐந்து கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும் கட்டி இல்லாமல் கரைக்க வேண்டும், பின்னர் இதனை அடுப்பில் வைத்து கட்டி இல்லாமல் கஞ்சி பதத்திற்கு காய்ச்சவும் நல்ல மனம் வந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டு சக்கரை சேர்த்து கலந்து விடவும், வெள்ளம் அல்லது நாட்டு சக்கரை கரைந்ததும் அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து கலந்து விடவும் இப்போது சூடான ராகி உளுந்து கஞ்சி ரெடி. டீ காபிக்கு பதிலாக இதனை எடுத்துக் கொள்ளலாம், இடுப்பு வலி முதுகு வலி கை கால் வலி பிரச்சனைக்கு மற்றும் ரத்த சோகை உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முதல் மூன்று நாட்கள் இதை எடுத்துக் கொண்டாலே போதும் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணலாம். வலிகளும் பறந்து ஓடிடும்..!!!

Read Previous

மெலிந்த குழந்தையின் உடல் எடையை கூட்ட டாக்டர் சிவராமனின் அறிவுரை..!!

Read Next

கருவேப்பிலை தண்ணீர் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் எக்கச்சக்கம்.‌‌..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular