![](https://tamilyugam.in/wp-content/uploads/2024/12/IMG_20241228_182425.jpg)
பலருக்கும் தங்களது முகம் அழகாக பலிவாக இருக்க வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொள்வார்கள் ஆனால் அதற்கான சரியான வழிமுறை தெரிவதில்லை இரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் ஏற்படுகிறது..
அதனால் முடிந்த அளவு இயற்கை முறையிலான தீர்வுகளை காண வேண்டும். இயற்கை வழிமுறைகளை பின்பற்றினால் நம்மால் பக்கவிளைவுகள் ஏற்படாமல் தடுப்பதோடு நிரந்தரமான தீர்வினை நம்மால் பெற முடியும் அதன்படி முகம் பொலிவாக மாற இயற்கையான வழிமுறைகளை காணலாம்..
நெல்லிக்காய் மிக எளிமையாக கிடைக்கக் கூடியவை இருந்தாலும் அதில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கிறது. இதனை கொண்டு உணவுப் பொருட்கள் செய்யப்படும் நிலையில் இதனை மூலிகை பொருளாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்..
நெல்லிக்காயை நாம் அப்படியே சாப்பிடுவதை விட வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை அதனை ஜூஸ் போட்டு குடிப்பதனால் பல்வேறு நன்மைகளை நம்மால் பெற முடியும் என்று கூறப்படுகிறது அதன் நன்மைகள் என்னென்ன என்று அதனை யாரெல்லாம் குடிக்க கூடாது என்றும் தெரிந்து கொள்ளலாம்..
இந்த ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது இதனை நாம் குடிப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் தினமும் குடித்து வந்தால் நம்மால் நாள் முழுவதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்பட முடியும்..
நெல்லிக்காய் ஜூஸில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமது செரிமான அமைப்பினை சீர்படுத்துவதோடு அதனை மேம்பட வைக்கிறது அதே போல் நமது ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் இந்த ஜூஸ் உதவுகிறது..
நெல்லிக்காய் ஜூஸ் அடிக்கடி நாம் குடித்து வந்தால் நமது தலைமுடி உதிர்வது குறைந்து அடர்த்தியாக கருமையான முடி வளர்ச்சியினை ஊக்குவிக்கும் இதை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றலும் இதற்கு இருக்கிறது..
முதலில் நெல்லிக்காய் சுத்தமாக கழுவி எடுத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள் பின்னர் அதனை வடிகட்டி விருப்பப்பட்டால் எலுமிச்சை சாறு அல்லது இஞ்சி சாறை பிழிந்து விட்டு குடிக்கலாம்..
குளிர்ச்சியால் ஏற்படும் சைனஸ் போன்ற நோய்கள் இருப்போர் இந்த ஜூசை குடிப்பதை தவிர்க்க வேண்டும் அதேபோல் இது சிறுநீரை பெருகும் என்பதால் சிறுநீரக கோளாறு இருப்போர் இதனை குடிக்கக்கூடாது ரத்தத்தை மெல்லியதாக மாற்றும் என்பதால் ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் இருப்போர் தவிர்க்க வேண்டும் குழந்தைகளுக்கு கொடுக்கும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது..!!