வார விடுமுறை எதிரொலி..!! கோவை ஊட்டிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

நீலகிரி ஊட்டியில் தற்பொழுது மலர் கண்காட்சி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் ஊட்டிக்கு செல்வதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றன.

தற்பொழுது ஊட்டிக்கு காரில் செல்ல இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பதால் அரசு பேருந்துகளில் பொதுமக்கள் ஊட்டிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சனி ஞாயிறு வார விடுமுறை வருவதைத் தொடர்ந்து ஊட்டி செல்ல அதிக அளவில் பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்டு கோவையில் இருந்து ஊட்டிக்கு 30 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட போக்குவரத்து கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “வார இறுதி நாளான சனி, ஞாயிறு விடுமுறையை கருத்தில் கொண்டு கோயம்புத்தூரில் இருந்து ஊட்டிக்கு செல்வதற்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த பேருந்துகளுடன் கூடுதலாக 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அதன்படி கோவை ,மேட்டுப்பாளையம் சாய்பாபா காலனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊட்டிக்கு 10 சிறப்பு பேருந்துகளும் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இன்று மற்றும் நாளை இயக்கப்பட உள்ளது. இது தவிர கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி ,சேலம் ஆகிய  இடங்களுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது”, எனவும் தெரிவித்துள்ளார்.

Read Previous

கேட்பாராற்று ரயிலில் கிடந்த பை..!! திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு அதிர்ச்சி..!!

Read Next

பாஜகவின் கனவு பலிக்காது..!! தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular