வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நெஞ்செரிச்சல், சர்க்கரை நோய் குணமாகும்..!!

வாழைத்தண்டு அதிக நார்ச்சத்து நிறைந்தது. இது வயிற்றுப் புண்கள் மற்றும் வயிற்றில் சீரற்று சுரக்கம் அமிலத்தை சீர் செய்ய உதவுகிறது. வாழைத்தண்டில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி 6 போன்றவை அடங்கி உள்ளது. இது உடலில் ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்துகிறது.

வாழைத்தண்டில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கலோரிகள் நீண்ட நேரத்துக்கு வயிறை நிறைவாக வைத்திருக்கும். இதனால் எடை இழப்புக்கு வழி வகுக்கிறது.

வாழைத்தண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்வதால் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டி பிரச்னைக்கு சிறந்த நிவாரணம் காணலாம். மேலும், வாழைத்தண்டில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.

வாழைத்தண்டில் நிறைந்துள்ள வைட்டமின் B6 மற்றும் இரும்பு சத்துக்கள் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவுகளை அதிகரிக்க உதவுகின்றன. அதேபோல், வாழைத்தண்டில் காணப்படும் பொட்டாசியம் சத்துக்கள் கொலஸ்ட்ராலை நீக்கவும், உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. மேலும், வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இதயம் மற்றும் உடல் தசைகள் வலு பெறுகின்றன.

சிறுநீரகக் கல் பிரச்னை உள்ளவர்கள் வாழைத்தண்டு ஜூஸுடன் சிறிதளவு ஏலக்காயை சேர்த்து எடுத்துக் கொள்வது, சிறுநீரகக் கல் பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும், சிறுநீரகப் பாதை தொற்றினால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தையும் வாழைத் தண்டு உணவு குறைக்கிறது. இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. மேலும், இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வாழைத்தண்டு ஜூஸை வடிகட்டாமல் குடிக்கலாம்.

Read Previous

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுகவினர் உண்ணாவிரதம்..!!

Read Next

தன்னை கடித்த பாம்பை திரும்பி கடித்த வாலிபர்..!! நொடியில் நடந்த பயங்கரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular