வாழைப்பழம் வாங்குபவர்கள் இதனை கவனத்தில் வைத்துக் கொண்டு வாங்குங்கள்..!! அனைவரும் கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
ஒரு விசேஷத்திற்கு வாழைப்பழம் வாங்க மார்க்கெட்டிற்கு சென்றிருந்தேன். வாழைப்பழம் வண்டியில் பேர பேசிக் கொண்டிருந்தேன். அப்போது என் பக்கத்தில் இன்று இருந்த ஒருவர் இந்த தாரை ஆரத்தி தரச் சொல்லி கேளுங்கள். பத்து ரூபாய் அல்லது இருபது ரூபாய் கூடுதல் ஆனாலும் பரவாயில்லை என்றார். அதற்கு நான் அவரிடம் விவரம் கேட்டேன். அதற்கு அவர் கூறிய பதில் என்ன தெரியுமா.. இது இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டது என்றார். நான் உங்களுக்கு எப்படி இது தெரியும் என்றேன். இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பழங்கள் மட்டுமே மஞ்சலாகும். ரசாயனம் கொண்டு பழுக்க வைக்கப்பட்டிருந்தால் காம்பும் பழம் அளவுக்கு மஞ்சளாக இருக்கும். இதற்கும் அதற்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள் என்று அங்கே இருக்கும் தாரை காண்பித்தார். எனவே வாழைப்பழம் வாங்குபவர்கள் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்வது நல்லது.




