
- வாழைப்பூ மசியல் செய்முறை
தேவையான பொருட்கள் :
* வாழைப்பூ ஒரு கப் (நறுக்கியது)
* துவரம்பருப்பு கால் கப்
* மஞ்சள்தூள்கால் டீஸ்பூன்
* புளிநெல்லிக்காய் அளவு
* எண்ணெய் தேவைக்கேற்ப
* கடுகு கால் டீஸ்பூன்
* பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
* காய்ந்த மிளகாய் 2
* பச்சைமிளகாய் 2
* கறிவேப்பிலை ஒரு கொத்து
* உப்புதேவைக்கேற்ப
செய்முறை :
புளியை ஒரு கப் தண்ணீரில் கரைக்கவும். பின் இந்த புளித் தண்ணீரில் உப்பு போட்டு, வாழைப்பூவை சேர்த்து வேக வைக்கவும். அதன்பின் துவரம்பருப்பில் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
வாழைப்பூ வெந்தவுடன் அதில் வெந்த துவரம்பருப்பை அதில் சேர்க்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள், சிறிதளவு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், கறிவேப்பிலை இவற்றைத் தாளித்து வாழைப்பூ கலவையில் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் இறக்கவும்.
இப்போது சுவையான வாழைப்பூ மசியல் தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இதனை சாதத்தில் பிசைந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.