
கணவன் அல்லது மனைவி இறப்பது போல் கனவு கண்டால் நல்லதா..? கெட்டதா..? இதற்கு என்ன அர்த்தம்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே பெரியோர்கள் தூக்கத்தில் வரும் கனவுகள் அனைத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது என்று கூறுவார்கள். அதுவும், அதிகாலையில் வரும் கனவுகள் அப்படியே நடக்க கூட வாய்ப்பு உள்ளது எனவும் கூறுவார்கள். பொதுவாகவே, கனவு என்பது நாம் உறங்கும் போது எதைப்பற்றி அதிகமாக நினைக்கிறோமோ அதைப்பற்றி தான் வருகிறது என்று சில ஆராய்ச்சிகள் இந்நிலையில், ஒரு சில கனவுகள் எல்லாம் லாஜிக்கே இல்லாமல் வரும். இந்நிலையில், நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு அர்த்தமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கணவன் மனைவி உறவு என்பது மிகவும் முக்கியமான உறவு. இந்நிலையில், கணவன் அல்லது மனைவி இறப்பது போல கனவு கண்டால் என்ன அர்த்தம் அது நல்லதா இல்லை கெட்டதா என்பதை குறித்து இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கனவுகள் என்பது நமக்கு நடக்கக்கூடிய விஷயங்களை முன்கூட்டியே தெரிவிக்கிறது. அந்த வகையில், மனைவி இறப்பது போல கனவு கண்டால் இன்று வரை வாழ்க்கையில் அவர்களுக்குள் உள்ள துன்பங்கள் அனைத்தும் நீங்கி ஆயுள் விருத்தி உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் கணவன் இறப்பது போல கனவு கண்டால் கணவரின் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும் ஆயுள் விருத்தி உண்டாகும். மேலும், கணவன் மனைவிக்கு இடையே உள்ள புரிதலும் கூடி பரஸ்பர அன்பு மற்றும் இருவருக்கிடையே உள்ள புரிதல்கள் அதிகமாகும் என்று கூறப்படுகிறது. உயிரோடு இருப்பவர்கள் இறந்து போவது போல் கனவு கண்டால் பயப்படவே தேவையில்லை.