வாழ்க்கை என்பது ஒரு முறை தான் அந்த வாழ்க்கையே இன்பமாக வாழ்வதும் துன்பமாக வாழ்வதும் உன் கையில் தான் இருக்கிறது…
உன்னிடம் பத்து ரூபாய் இருந்தால் டீயை மட்டும் குடி 10 ரூபாய்க்கு வடையும் சேர்த்து சாப்பிடாதே…..
உன்னிடம் 500 ரூபாய் இருந்தால் பிரியாணி மட்டும் சாப்பிடு ஆயிரம் ரூபாய்க்கு கே எப் சி சாப்பிட வேண்டும் நினைக்காதே…
உனக்கு குடியிருக்க வீடு கட்ட வேண்டும் என்று நினைத்தால் உன்னிடம் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதற்கு மட்டும் வீடு கட்டு…..
கடனை வாங்கி வீட்டை கட்டி கடனை அடைத்து விடலாம் என்று நினைத்தால் அது முட்டாள்தனம் நீ வாழ்நாள் முழுவதும் நீ துன்பத்தில் தான் இருக்க வேண்டும்.
நீ மட்டும் இல்லாமல் உனது குடும்பமே துன்பத்தில் இருக்க வேண்டும்…
உன் தலை மீது ஒரு பாரத்தை வைத்துக் கொண்டு நீ எவ்வளவு தூரம் நடப்பாய்???
நீ பாரம் தாங்க முடியாமல் ஒருநாள் கீழே விழத் தான் செய்வாய்…..
இன்பத்தையும் துன்பத்தையும் நீ தான் தீர்மானிக்கிறாய்….