Oplus_131072
வாழ்க்கையில் நாம் பெறக்கூடாத சாபங்கள்..!!
சில சாபங்களை பெற கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அதை பற்றி இந்த பதிவில் காண்போம். சாபங்கள் முன்னோர்களால் வர கூடிய சாபங்கள் நாம் அடுத்த பிறவிகள் வரை தொடரும். அதனால் தான் நாம் வாழும் நாட்களில் எந்த தீங்குகளையும் செய்யாமல் பிறருக்கு முடிந்த வரையிலும் உதவிகளை செய்து வர வேண்டும். சசத்திரங்கள் படி குறிப்பிட்ட சில சாபங்களை மட்டும் நாம் பெறவே கூடாது. இதற்கு ஆன்மீக ரீதியாக பரிகாரங்கள் இருந்தாலும் அவை நிரந்தரமாக இருக்காது. முதலில் பெற்றோர்கள் சாபம் என்பது மிகவும் கொடுமையானது. அவர்களை மதிக்காமல் கடைசி காலத்தில் பார்த்துக்கொள்ளாமல் இருப்பது மிகவும் தவறான ஒன்று. இதனை செய்யும் போது அவர்கள் சாபம் விடாமலே அந்த சாபத்தை நாம் பெறுகிறோம். இதனை நீங்கள் தெரியாமல் செய்திருந்தால் கூட சண்டிகேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று அவரின் முன்பு தியானத்தில் ஈடுபட்டால் கட்டாயமாக சாப விமோச்சனம் கிடைக்கும். மேலும் பெண் சாபம் என்பது ஏழு தலைமுறைக்கும் தொடர கூடியது. ஒரு பெண்ணிற்கு நாம் இளைக்கும் தவறோ அல்லது துரோகமோ அவர்களின் பரம்பரையையே சீரழித்து விடும். எனவே ஒரு பெண்ணிடம் எந்த சாபங்களையும் பெற கூடாது. இந்த பெண் சாபத்தில் இருந்து விடுபட நந்தி பகவானை வணங்கி வந்தால் நல்ல பலனை பெறலாம். அடுத்ததாக சகோதரர்கள் சாபம். உங்கள் உடன் பிறந்தவர்களுக்கு துரோகம் செய்தாலோ அல்லது அவர்களிடம் இருந்து சொத்துக்களை அபகரித்தாலோ கட்டாயமாக நாம் அந்த சாபத்திற்கு ஆளாக வேண்டும். இந்த சாபம் நீங்க அஷ்டமி திதியில் பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் இந்த சாபத்தில் இருந்து விடுபடலாம். ஆனால் திரும்பவும் ஆரம்பித்தால் கண்டிப்பாக சாப விமோட்சனம் கிடைக்காது.




