வாழ்க்கை என்றாலே பல்வேறு சூழ்நிலைகளை ஒரு மனிதன் சந்தித்துதான் ஆக வேண்டும் அப்போது ஒரு சிலர் அவசரமாக செயல்பட்டு அதனை கடந்து செல்ல முயற்சி செய்வார்கள் ஆனால் அதுவே நீங்கள் சற்று பொறுமையாக இருந்து செயல்படும் பச்சத்தில் நமக்கு பலன்கள் இரட்டிப்பாகும்…
பொறுத்தார் பூமி ஆள்வார் என்ற பழமொழியே இருக்கிறது ஒருவர் பொறுமையாக இருக்கிறார் என்றால் அது அவரது பலவீனத்தை குறிப்பதாக இல்லை அது அவரது பொறுமையை தான் குறிக்கிறது இந்த பொறுமையின் பலன் என்ன என்பதை இப்பதிவில் ஒரு குட்டி கதை மூலம் தெரிந்து கொள்ளலாம்…
ஒருமுறை மகா என்ற பெண் தனது டாக்குமெண்ட் ஒன்றை வெளிநாட்டு யூனியன் கம்பெனிக்காக தயாரித்துள்ளார் ஆனால் அதற்கு என்ன விலை நிர்ணயம் செய்யலாம் என்று அவருக்குள் ஒரு யோசனை இருந்துள்ளது. அது குறித்து அவர் தனது தோழியிடம் கலந்துரையாடும் பொழுது அவரது தோழி அந்த டாக்குமென்ட்டுக்கு இருபதாயிரம் டாலரை விளையாட நிர்ணயம் செய்ய அறிவுறுத்துகிறார். ஆனால் மகா என்ற தொழிலதிபருக்கோ இது சற்று அதிகமான தொகையாக இருக்கிறது என்னும் தயக்கம் இருந்துள்ளது. விலை அதிகமாக கூறிவிட்டால் ஒருவேளை டாக்குமெண்டை வாங்காமல் சென்று விட்டால் என்ன செய்வது என்னும் சிந்தனை அவருக்குள் இருந்தது. அந்த சமயத்தில் அந்த வெளிநாட்டு கம்பெனிகள் இருந்த அதிகாரி ஒருவர் அந்த டாக்குமெண்ட்டை எடுத்துச் செல்ல வந்திருக்கிறார்.. அவ்வாறு வந்த நபர் மகாவிடம் டாக்குமெண்ட்க்கான பணம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் ஆனால் மகா தயக்கத்தில் இருந்த காரணத்தினால் பதில் எதுவும் சொல்லாமல் மௌனமாக இருந்துள்ளார். எப்படி குறிப்பிட்ட தொகையை கேட்பது என்னும் எண்ணம் அவருக்குள் மேலோங்கி இருந்துள்ளது இதனால் தனது பொறுமையை இழந்து அதிகாரி மகாவிடம் இதோ உங்கள் டாக்குமெண்ட்டுக்கான முதல் தவணை என்று கூறி 100, 000 டாருக்கான காசோலையை கொடுத்துவிட்டு டாக்குமெண்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். மீதித்தொகை எவ்வளவு என்று நிர்ணயித்துக் கூறுங்கள் அதற்கான காசோலையும் கொடுப்பதாக அவர் கூறி சென்றுள்ளார். இந்த கதையில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் பொறுமையாக இருந்த மகாவுக்கு கிடைத்த லாபம் நான்கு மடங்கு அதுவே தனது பொறுமையை இழந்து செயல்பட்ட அதிகாரிக்கு அதே நான்கு மடங்கு நஷ்டம். இதனால்தான் எல்லா சூழ்நிலையிலும் சற்று நிதானமாக செயல்படுங்கள் என்று கூறப்படுகிறது நிதானமாக இருந்தால் மட்டுமே நம்மால் சரியான முடிவுகளை எடுக்க முடியும் அதன் மூலம் கிடைக்கும் வெற்றியையும் அனுபவிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்..!!