
மரங்கள் தண்ணீரை தேடி பூமிக்கு அடியில் தொலைதூரத்திற்கு வேர் விடுகின்றன. காட்டு விலங்குகள் வேட்டையாடி தான் இறையை கண்டுபிடிக்கின்றன பறவைகள் இரை தேடி எங்கெங்கோ பறக்கின்றன எல்லாம் முயற்சியின் பலன் தானாக எதுவும் நடந்திடவில்லை..
படிப்பதும் வேலை தேடுவதும் பெரிய கட்டிடங்களை எழுப்புவதும் முயற்சி இல்லாமல் நடப்பதில்லை முயற்சியில் தான் இருக்கிறது வளர்ச்சி. மரம் சிறியதாய் இருக்கையில் வளையும் வலுவற்றதாய் தெரியும் அதுவே முற்றிய நிலையில் யானை கட்டும் தனியாகவும் பயன்படும் முயற்சி செய்கிறவன் செல்வங்களை பெற்று வாழ முடியும் இது நாலடியார் நமக்கு தரும் பாடம். முயற்சியை மேற்கொள்ளாதவன் மட்டுமே வெற்றியில் இருந்து விலகிக் கொள்கிறான். என்று ரிச்சர்ட் வேட்லி கூறுகிறார். உழைப்பு நேர்மை இடைவிடா முயற்சி கொண்டு உயர நினைப்பவர்கள் சமூகத்தில் எத்தனை பேர் முயற்சி இல்லாமல் படிக்க இடம் கிடைக்க வேண்டும் படிக்காமலே தேர்வில் வெற்றி பெற வேண்டும் தேடி அலையாமலேயே வேலை கிடைத்துவிட வேண்டும் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்கி விட வேண்டும் என்றும் நினைக்கின்றவர்கள் இருக்கின்றனர் இது என்ன நியாயம்..
பலருக்கும் குறுக்கு வழியில் வெகு சீக்கிரம் முன்னேறிவிட ஆசை இருக்கிறது. குறுக்கு வலி சறுக்கும் என்பதை பின்னர் அறிந்து வருந்தி பயன் என்ன இருக்கிறது. கடுமையாக உழைத்து படித்து முதல் மதிப்பெண் பெரும்போது எத்தனை மகிழ்ச்சி திறமையாக வேலை பார்த்து பதவி உயரும் போது எத்தனை திருப்தி பத்து மாதம் கருவில் சுமந்து பிள்ளை பெரும் ஒரு பெண்ணுக்கு கிடைக்கிற ஆனந்தமே தனி அதை தத்த பிள்ளை அடைவதன் மூலம் அனுபவிக்க முடியுமா. இப்படிதான் எத்தனையோ தலைவர்களும் கவிஞர்களும் எழுத்தாளர்களும் தொழில் அதிபர்களும் சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து உருவானவர்கள் முயற்சி இல்லாமல் எதுவும் முன்னேற்றம் காணாது…
நீங்கள் செய்கின்ற காரியத்தில் கீழ்மேல் பார்க்காதீர்கள் காந்தியடிகள் கூறினார். ஒரு விதத்தில் நாவிதர் தொழிலும் வக்கீல் தொழிலும் ஒன்றே என்று எதையும் அற்புத தொழில் என்று அலட்சியப்படுத்த வேண்டாம் தெருவில் பேப்பர் விற்ற பையன்கள் பின்னால் பெரிய பத்திரிக்கை முதலீட்டராகவும் தொழில் அதிபராகவும் இருக்கிறார்கள்..
சின்ன இரும்பு இங்கும் அங்கும் ஊர்ந்து சென்று தனக்கு தேவையான தானியங்களை சேகரிக்கிறது பறவைகள் தொலைதூரத்துக்கு பறந்து சென்று புழு பூச்சி முதலியவற்றை கண்டெடுத்து உண்ணுகிறது நாய் பூனை ஆடு மாடு போன்ற பிராணிகளும் தங்களுக்கு தேவையான உணவை நாடி பெறுகின்றன. போராட்டமே வாழ்க்கை என்கிறார் இது வெறும் வார்த்தை அல்ல அனுபவ வார்த்தையாகும். புண்ணில்லாத போர்க்களம் இல்லை அதைப்போல் போராட்டம் இல்லாத வாழ்க்கை இல்லை..!!