சிலருக்கு நாம் அவசியம் இல்லை. ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவசியம். பசித்த வயிறு, பொய்யான உறவு, நம்பியவர் செய்த துரோகம், கடனுடன் வாழும் வாழ்க்கை, இவை நான்கும் கற்பிக்கும் அனுபவப் பாடத்தை இந்த உலகில் யாராலும் கற்பிக்க முடியாது.
ஒவ்வொரு இதயத்திலும் ஏதாவது ஒரு வலி இருந்து கொண்டுதான் இருக்கிறது. அதை, முட்டாள் கண்ணீரிலும், அறிவாளிகள் புன்னகையிலும் மறைத்துக் கொள்கிறார்கள்.
வாழ்க்கையில் நீங்கள் தொலைத்த உறவுகளை மட்டும் தேடிச் செல்லுங்கள். விலகிச் சென்ற உறவுகளை தேடிச் செல்லாதீர்கள். மகிழ்ச்சி என்பது காசு பணத்தால் வருவது அல்ல. நம் மீது பாசம் காட்ட, நமக்கு ஆறுதலாக ஒரு உறவு கடைசி வரை கிடைக்குமானால் நமக்கு எப்போதும் மகிழ்ச்சிதான்.
சிலரை நாம் சிறந்த உறவுகள் என நம்பும் நேரத்தில், நாங்கள் சிறந்த நடிகர்கள் என்று நிரூபித்து விடுகிறார்கள். சிலருக்கு நாம் அவசியம் இல்லை, ஆனால் நாம் செய்யும் உதவிகள் மட்டும் அவசியம்.
இப்படியானோரை நாம் அதிகம் சந்திக்கக் கூடும். இது வெளிப்படையாகவே தெரிந்தாலும் நாம் அவர்களை வெறுப்பதில்லை. ஏனெனில் நாம் இன்ன செய்தோருக்கும் நன்மை செய்வதையே விரும்புகின்றோம். இன்று உண்மையான அன்பை அவர்கள் அலட்சியம் செய்யலாம்.
ஆனால் ஒரு நாள் அதே அன்பு கிடைக்காதா என்று ஏங்கித்தான் நிற்கப் போகிறார்கள். தேடிப்போய் பேசுனா பொய். விட்டுக் கொடுத்து போனா பொய். வெறுத்து ஒதுக்கும் இடத்தில் அன்பு காட்டினால் பொய். இனிக்க இனிக்க பேசினால் உண்மை என்று நம்புகிறது. உலகம்.