
முதலில் தினமும் காலையில் எழும்போது உள்ளங்கையை பார்த்து நமக்கு பிடித்த கடவுளின் பெயரை உச்சரிப்பது மிகவும் நல்லது. காலையில் குளித்து முடித்தவுடன் கடவுளை வணங்குவது நல்ல பலனைத் தரும். வாரத்திற்கு ஒரு நாளாவது கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்த வாழ்வது நல்லது. நாம் உணவருந்துவதற்கு முன் ஏதாவது ஒரு உயிருக்கு உணவிட்டு உண்பது நல்ல பலனைத் தரும். நாம் வாழ்க்கையில் தர்மம் என்ற ஒரு செயலை செய்வதை அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டும். வெறும் நெற்றியாக இருக்கக் கூடாது குங்குமம் சந்தனம் விபூதி நாமம் இதில் ஏதாவது ஒன்றை நெற்றியில் வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும். இரவில் தூங்குவதற்கு முன் கடவுளுக்கு நன்றி கூறுங்கள் அன்றைய பொழுதை நினைவுக்குர்ந்து நல்லதை மட்டும் நினைத்து கெட்டதை விட்டுவிட்டு நாம் ஏதாவது தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடு கடவுளே என்று கூறி இன்று செய்த தவறை நாளை செய்யாமல் இருக்க உங்களை திருத்திக் கொள்ளுங்கள்.