வாழ்நாளில் கணவன் மனைவி பிரியாமல் இருக்க தினமும் இந்த ஒன்று கட்டாயம் வேணும்..!!

வாழ்நாளில் கணவன் மனைவி பிரியாமல் இருக்க தினமும் இந்த மேட்டர் கட்டாயம்…

நன்றி தெரிவியுங்கள் : இணைந்திருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் அவர்களின் அன்பை வெளிப்படுத்துவது போல் நன்றியையும் வெளிப்படுத்துகிறார்கள் நீங்கள் என் வாழ்வில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி என்று அவர்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி கூறிக்கொள்வார்கள் சிறிய விஷயங்களுக்கு கூட நன்றி கூறி கொள்வார்கள். குறிப்பாக ஒருவர் காண தேநீரை மற்றவர் தயாரிப்பதாக இருக்கட்டும், வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதாக இருந்தாலும் அதற்கும் நன்றி தெரிவித்திருக்கிறார்கள்.

உடல்ரீதியான அன்பு மொழி : மகிழ்ச்சியான தம்பதிகள் தங்களின் பாராட்டுகளை உடல் ரீதியாக தெரிவிப்பார்கள் இவர்கள் கட்டிப்பிடித்துக் கொள்வது மற்றும் கைகளை கோர்த்துக்கொள்வது என செய்கிறார்கள் இதே போல் உடல் ரீதியான பிணைப்பு என்பது அவர்கள் இருவரையும் உணர்வு ரீதியாக நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்..

வெளிப்படையான மற்றும் தெளிவான உரையாடல் :
மற்ற உறவுகளைப் போல் இன்றி திருமண உறவு என்பது நீண்டகால பார்ட்னர்ஷிப் ஆகும் எனவே இது நீண்ட காலம் செல்ல வேண்டும் எனில் அதற்கு வெளிப்படையான மற்றும் தெளிவான உரையாடல் வேண்டும் மகிழ்ச்சியான தம்பதிகள் அவர்களின் உணர்வுகளை வெளிப்படையாகவும் தெளிவாகவும் பகிர்ந்து கொள்கிறார்கள் அவர்கள் இணைந்து திட்டமிடுகிறார்கள் ஒன்றாக இணைந்து குழு போல் செயல்படுகிறார்கள்..

இருவரும் சேர்ந்து தரமான நேரத்தை செலவிடுகிறார்கள் : அவர்கள் எத்தனை பரபரப்பாக இருந்தாலும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து நேரம் செலவிடுகிறார்கள் அவர்களின் உறவுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்கள் தரமான நேரம் செலவிடுவதால் அவர்கள் மகிழ்ச்சியான தம்பதிகளாக இருக்கிறார்கள் அவர்கள் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவது அல்லது சினிமா பார்ப்பது என அவர்கள் தரமான நேரத்தை செலவிடுகிறார்கள் அவர்கள் தினமுமே தங்களுக்கான நேரத்தை ஒதுக்கி கொள்கிறார்கள்..

ஒன்றாக சேர்ந்து சிரிப்பது : சிரிப்புதான் எந்த பிரச்சினைக்கும் தீர்வு ஒன்றாக சேர்ந்து சிரிப்பது தம்பதிகளுக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்குகிறது இது அவர்களுக்குள் நல்ல நினைவுகளை கொடுக்கிறது..

சண்டை : மகிழ்ச்சியான தம்பதிகள் சண்டையிடுகிறார்கள் அவர்கள் கடினமான உரையாடல்கள் மற்றும் சண்டைகளை தவிர்ப்பதை விட்டு அவர்கள் ஒருவரின் நிலை குறித்து தினமும் மகிழ்வார்கள் அவர்களுக்கு ஏற்படும் கருத்து வேறுபாடுகள் கூட நீண்ட நேரம் நிலைப்பதில்லை..

ஒருவருக்கொருவர் ஆதரவு : மகிழ்ச்சியான தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுக்கிறார்கள். ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்கிறார்கள். அவர்களின் தனிப்பட்ட மற்றும் வேலை ரீதியான இலக்குகளுக்கு கூட ஆதரவு கொடுத்துக் கொள்வார்கள், அவர்கள் சில அன்றாட வழக்கங்களை கொண்டிருப்பார்கள் நான் உன்னை காதலிக்கிறேன் என்று உறங்குவதற்கு முன்னர் கூறுவதாகும் அல்லது காலையில் இருவரும் சேர்ந்து ஒன்றாக தேநீர் பரவுவதாக இருக்கட்டும், மகிழ்ச்சியான தம்பதிகள் சில பழக்கங்களை ஒன்றாக பகிர்ந்து கொள்கிறார்கள் இதுவும் அவர்களிடையே சில பிணைப்புகளை உருவாக்குகிறது..

ஒருவரை ஒருவர் பாராட்டிக் கொள்வார்கள் : மகிழ்ச்சியான தம்பதிகள் ஒருவருக்கொருவர் அங்கீகாரம் கொடுப்பது ஒருவருக்கொருவர் பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்வது என இருப்பார்கள் ஒருவரின் முயற்சியை ஒருவர் பாராட்டுவார்கள் அவர்களுக்கு தேவைப்படும் இடங்களில் அவர்களுடன் இருப்பார்கள் அப்போதுதான் அவர்களின் பார்ட்னர்கள் தங்களை மதிக்கிறார்கள் என்ற எண்ணம் வரும்..!!

Read Previous

நீண்ட நாள் வாழ ஆசைப்படுபவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்கவும்..!!

Read Next

கூரான கண்பார்வையும் சீரான வாழ்க்கையும் வேண்டுமா? இதை மட்டும் செய்யுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular