வாழ்வின் பல தோற்றங்கள் உண்டு அத்தோற்றங்களை அறிவதில்தான் இந்த வாழ்க்கையை அடங்கியுள்ளது..!!

இயற்கையின் படைப்பு எல்லாமே இன்பத்தின் இருப்பிடமாக தான் இருக்கிறது இன்பத்தை புரிந்து கொள்வதிலே இன்பத்தை உணர்வதிலே இன்பத்தை அனுபவிப்பதிலே ஒரு பரி பக்குவ நிலையை அடையாத விளக்கு தான் துன்பம், துயரம் என்று எல்லாம் எழுகின்றன. ஒழுக்கமான சூழ்நிலை நிலவுகிறது உடல் வியர்த்து கொட்டுகிறது அப்பப்பா காற்றே இல்லை அதனால் தான் இந்த புழுக்கம் என்கிறோம்..

ஒருவர் மின்விசிறியை கொண்டு வந்து நம் முன்னே வைத்து இயக்கி விட்டு செல்கிறார். சுகமான காற்று நம் மீது படுகிறது அப்பப்பா என்ன சுகம் அருமையான காற்று என்று ஆனந்த படுகிறோம். காற்று எங்கிருந்து வந்தது மின்விசிறியா காற்றை கொண்டு வந்தது நம்மை சூழ்ந்து கிடக்கும் காற்றை மின்விசிறி சற்று சலனப்படுத்தியது அவ்வளவுதான் அதாவது நமது முயற்சியால் காற்றை பயன்படுத்திக் கொண்டும் முயற்சி காரணமாக துன்பம் என்று கருதிய உணர்வு நிலை மாறிவிட்டது நமது முயற்சியால் இன்பநிலையை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும். இன்பத்தை உணராத நிலையும் துன்பத்தை பற்றிய அதிகப்படியான நிலையும் இப்படிப்பட்ட ஒன்றுதான் துன்பம் துயரம் என்பன மனித வாழ்க்கையில் இயற்கை நிலை அல்ல அது ஒரு செயற்கையான கற்பனை என்றுதான் கொள்ள வேண்டும். திட்டமிட்ட மனித முயற்சியால் துன்பத்தை விரட்டுவது மட்டுமல்ல மீண்டும் அப்படி ஒரு நிலை தோன்றாமலே தடுத்து விட முடியும் துன்பம் துயரம் என்பன அறியாமை காரணமாக தோன்றும் ஒரு பொய் தோற்றம்தான்..

வாழ்க்கை குறித்த ஆழ்ந்த ஞானமும் தெரிவும் ஏற்படும்போது அவை தாமாகவே மறைந்து விடுகின்றன மன வலிமை குன்றிய மக்களிடம் தான் இந்த துன்பம் துயரம் பற்றிய எண்ணம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு வகையான காரணங்களால் மன ஆரோக்கியம் குன்றியவர்களுக்கு தான் அதிகமான துன்ப உணர்வுகளுக்கு உட்படுகின்றனர். துன்ப உணர்ச்சிக்கும் துயர் நிலைக்கும் காரணம் எதுவாக இருந்தாலும் அதன் நிலைகளாக திகழ்வது மனம் தான். பலர் துன்பம் துயரம் என்று கருதக்கூடியவற்றை சிலர் இன்பம் என்று கொண்டு மகிழ்ச்சி கொள்வதும் உண்டு. எனவே வாழ்க்கையில் எல்லாவற்றையும் கடந்து இன்பத்தை காண வேண்டும் அதுவே இன்பம் நிலைப்பதற்கான வழி கவலையை மட்டும் எண்ணி வாழ்ந்து கொண்டிருந்தால் வாழ்க்கையில் வலி மட்டுமே மிஞ்சும்..!!

Read Previous

மலர்கள் மூலம் உங்கள் மனநிலையை மேம்படுத்த முடியும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

அருகம்புல் சாறு குடித்தால் கிட்னியில் உள்ள கல் வெளியேறும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு..!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular