வாழ்விழந்த விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன்..!!

டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட  அனைத்து டெல்டா விவசாயிகளுக்கும் பல வாரங்களாகியும் திமுக அரசு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், பழுதடைந்த அரசு தானியக்கிடங்குகளாலும், கொள்முதல் செய்வதில் அரசு காட்டிய அலட்சியத்தாலும் தான் பல டன் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்பு கட்டிப்போனதாக தெரிவித்துள்ளார்.

தங்களின் பல மாத உழைப்பு பாழாய்ப்போனதைக் கண்டு கலங்கி நிற்கும் விவசாயிகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லாமல். நெற்பயிர்களைப் பார்சலில் கொண்டு வந்து முதல்வர். ஆய்வு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆய்வு செய்து பல வாரங்களாகியும் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இழப்பீட்டுத் தொகையை இன்னும் வழங்காமல் திமுக அரசு இழுத்தடிப்பது நியாயமல்ல என்றும் அவர் தெரிவித்துளளார்.

நானும் டெல்டாகாரன் என மேடையில் முழங்குவதை விட ஏக்கருக்கு ரூ. 30,000 இழப்பீடு வழங்கி விவசாயிகளின் துயரத்தைத் துடைப்பது தான் சாலச் சிறந்தது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Read Previous

50 ஓவர்களில் 574 ரன்கள்..!! பிகார் அணி அதிரடி உலக சாதனை..!!

Read Next

பசங்க படிப்பு தான் முக்கியம்..!! ஜிபி முத்து லேட்டஸ்ட் பேச்சு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular