
தெற்கு பிரேசிலில் இகுவாஸு என்னும் புகழ்பெற்ற அருவி உள்ளது. தற்போது இது அமெரிக்காவில் உள்ள மிகவும் பிரத்தியேகமான நயாகரா அருவி போல காட்சியளிக்கிறது. இந்த நகரில் கடந்த வாரமாக மிகவும் கனமழை பெய்து வந்துள்ளது. இதனால் இகுவாஸு அருவியில் வழக்கத்தை விட அதிகமான நீர்வீழ்ச்சி கொட்டி வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது. இதன் அளவு 6 மடங்கு அதிகமாக உள்ளது என்று கூறப்படுகிறது. நயாகரா அருவி போல காட்சியளிக்கும் இந்த இகுவாஸு அருவியை காண பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.