‘கேப்டன் கூல்’ என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி வரும் ஜூலை 7-ம் தேதி தனது 43 ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் தனக்கென ரசிகர்களை சம்பாதித்து வைத்திருக்கும் தோனி இப்போது சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் IPL போட்டிகளில் மட்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
இப்படி இருக்க தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ஆந்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர்கள் தோனிக்கு 100 அடி உயர கட்-அவுட்டை வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்-அவுட்டில் தோனி இந்திய அணி ஜெர்சி அணிந்திருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.