விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி உடல் நலக்குறைவின் காரணமாய் ஏப்ரல் ஆறாம் தேதி இயற்கை எள்தினார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விக்ரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் புறக்கணிப்பதாக அறிவித்திருந்தார், இதற்கிடையே இன்று மதுரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்பொழுது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் கூறியது “ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக படுகொலை நடந்துள்ளது. ஆடு மாடுகளை பட்டியில் அடைப்பது போல இடைத்தேர்தலின் போது வாக்காளர்களை பட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தி உள்ளனர். அதனை தேர்தல் ஆணையம் இதுவரை கண்டு கொள்ளவில்லை. இதற்கு காவல்துறை, அரசு அதிகாரிகள், திமுக ஆட்சியில் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் நாங்கள் விக்கிரவாண்டி பொது தேர்தலை புறக்கணிக்கின்றோம். மக்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் என தேர்தலை பிரித்து பார்த்து வாக்களிக்கின்றனர்”, என கூறயுள்ளார்.