விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பறக்கும் படையினருக்கு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு..!!

விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி எம்எல்ஏவாக பதவி வகித்த புகழேந்தி உடல் நலக்குறைவின் காரணமாய் ஏப்ரல் ஆறாம் தேதி இயற்கை எய்தினார். இதனை தொடர்ந்து விக்ரவாண்டி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நேர்மையுடனும், பாரபட்சம் இன்றியும் வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்று பறக்கும் படை அதிகாரிகளுக்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தற்பொழுது தீவிரமாய் நடைபெற்று வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னேற்பாடு பணிகளையும் தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார்

அந்த வகையில் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்திவரும் வாகன சோதனையை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உள்ளார். அப்போது அவர் பறக்கும் படையினரை இடம் சோதனையின் போது கண்ணியத்துடன்  நடந்து கொள்ள வேண்டும் எனவும், அதே சமயத்தில் எந்தவித பாரபட்சமும் இல்லாமல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்படும் பணம், பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்று பறக்கும் படை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

Read Previous

செங்கல்பட்டில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம்..!! தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்களை கடித்து குதறிய தெரு நாய்கள்..!!

Read Next

டயர் வெடித்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வேன்..!! பரிதாபமாய் பறிபோன உயிர்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular