விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி உடல் நலக் குறைவினால் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு மேலும் அதற்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசார குப்பம் கிராமத்தில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்க திமுகவினர் வைத்திருந்த வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்தலில் திமுக வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார் .
மேலும் இது குறித்து அவரின் அறிக்கையில் “இடைத்தேர்தல் நடைபெற உள்ள விக்கிரவாண்டி தொகுதி ஆசார குப்பம் கிராமத்தில் திமுக கிளை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான இராமலிங்கம் என்பவர் வீட்டில் வைத்து கிருஷ்ணகிரி மாவட்ட திமுக நிர்வாகிகளால் வாக்காளர்களுக்கு கையூட்டாக வழங்கப்பட இருந்த வேட்டி சட்டை, சேலை உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் முன்னிலையில் பாமக கட்சியினர் கைப்பற்றி மக்களிடம் ஒப்படைத்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறிய திமுகவின் இந்த சட்ட விரோத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் விதிகளை சற்றும் மதிக்காமல் திமுகவினர் பொதுமக்களுக்கு பரிசு பொருட்களை கையூடாக வழங்கியதை கண்டித்து பாமக கட்சியினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டுள்ளனர்.
தேர்தல் அதிகாரி, வருவாய்துறை அதிகாரி, காவல்துறையினர் உள்ளிட்டவருக்கு புகார் கொடுத்து வரவழைத்துள்ளனர் மீதமுள்ள பரிசு பொருள்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர் தேர்தல் அதிகாரிகளும், காவல் அதிகாரிகளும் திமுகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக வீட்டுக்குள் பதிக்கி வைத்திருந்த வேட்டி சேலைகளை திமுகவினர் கொல்லைப்புற வழியாக எடுத்து செல்ல உதவி செய்துள்ளனர்.
திமுகவின் மக்கள் விரோத செயல்பாட்டுக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கொந்தளித்துள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் மக்கள் கோபத்தை நன்றாக பார்க்க முடிகிறது, இதனால் விக்கிரவாண்டி தொகுதியில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அஞ்சி நடுக்கும் திமுக அரசு இயந்திரத்தின் உதவியுடன் வாக்காளர்களை விலை கொடுத்து வாங்க முயற்சி செய்து வருகின்றது. இதற்கு தமிழக அரசு அதிகாரிகள் துணை போவது கண்டிக்கத்தக்கது”, என அவர் கூறியுள்ளார்.