
1990 ஆம் ஆண்டு “என் காதல் கண்மணி” திரைப்படத்தின் மூலமாக திரையுலகத்திற்கு அறிமுகமானவர் நடிகர் விக்ரம். ஆரம்ப காலங்களில் இவர் நடித்த படங்கள் அனைத்துமே தோல்வியே தழுவியுள்ளன. ஒரு கட்டத்தில் மிகவும் துவண்டு போன நடிகர் விக்ரம் சீரியல்களில் நடிக்க நினைத்திருக்கிறார்.பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘சேது’ திரைப்படம் தான் விக்ரமுக்கு ‘சீயான்’ என்ற பட்டப் பெயரையும் மிகப்பெரிய அடையாளத்தையும் தமிழ் சினிமாவில் பெற்று தந்தது.
அதன் பிறகு விக்ரம் நடித்த காசி, ஜெமினி, பிதாமகன், அன்னியன், தெய்வத்திருமகள் என்று அனைத்து படங்களுமே வெற்றி பெற்றன. இன்று தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருக்கும் நடிகர் விக்ரம் ஒரு காலத்தில் வாய்ப்புக்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளார். அப்போதும் அவர் ஏறி இறங்காத இடங்களே இல்லை என்று கூறலாம்.
சினிமாவில் இருக்கும் தன் உறவினர்களை எல்லாம் தேடித்தேடி சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். அந்த வகையில் தனது உறவினரும் நடிகருமான பிரசாந்தை நேரில் சென்று வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் அவரது குடும்பமே விக்ரமை உதாசீனப்படுத்தி உள்ளனர். பிரசாந்தின் தந்தை தியாகராஜன் மிகப்பெரிய தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.