விசாரணைக்கு அழைத்துச்சென்று இலட்சக்கணக்கில் பேரம் பேசிய காவல்துறை..!! மர்ம மரணமடைந்த இளைஞர்..!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேடர் நொய்டா என்னும் பகுதியை சார்ந்தவர் யோகேஷ். சம்பவ தினத்தன்று யோக இசை அங்குள்ள சிபியான காவல் நிலைய அதிகாரிகள் சிறுமியை கடத்தி வந்ததாக கூறி காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர்.

இதனால் அதிர்ந்து போன அவரின் குடும்பத்தினர் அதிகாரிகளிடம் வழக்கு குறித்து விசாரித்தனர். அதற்கு பதில் அளிக்க மறுத்த காவல்துறை அதிகாரிகள் காவல் நிலையம் வந்து பேசிக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். பதறிஅடித்தபடி காவல் நிலையம் சென்றபோது வேண்டுமென்றே யோகேஷின் சகோதரர் மற்றும் உறவினர்களை அலகழித்த அதிகாரிகள் இறுதியில் யோகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். காவல் நிலையத்தில் யோகேஷ் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் உறவினர்கள் போராட்டத்தை தொடர்ந்ததை தொடர்ந்து தற்போது தகவல் காவல்துறையினரின் உயர் அதிகாரிக்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியில் இருந்த அனைவரிடமும் விசாரிக்கப்பட்டது முதல் கட்ட தகவலின் படி காவல்துறையினர் யோகேஷின் சகோதரரிடம் ஐந்து லட்சம் பணம் கேட்டனர். முதல் கட்டமாக ஒரு 50 ஆயிரம் பணமும் மதுபானத்திற்கான பணத்தையும் யோகியாசின் சகோதரர் கொடுத்த நிலையில் ரூ4.5 லட்சம் தொகை காலையில் வேண்டும் என கூறியுள்ளனர். இதற்கிடையில் தான் யோகாசின் மர்மம் மரணம் ஏற்பட்டுள்ளது.

தற்பொழுது இந்த சம்பவம் தொடர்பாக சியானா காவல் நிலைய அதிகாரிகள் மீது உயர் அதிகாரிகள் உத்தரவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Previous

‘பலத்த காற்று வீசும்’ – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Read Next

கனமழை – மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் பலி..!! பெரும் சோகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular