
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். திருமணத்தை மீறி வேறொருவருடன் உறவில் இருந்ததாக கூறி, கணவரே வெட்டி கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவி கோமதியை கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.