
தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அரசியலில் விஜய்க்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார். மேலும், “அதிமுகவும், பாஜகவும் கூட்டணி சேர்ந்து, திமுக கூட்டணி அப்படியே தொடர்ந்து, தவெக தனித்துப் போட்டியிட்டால், 2026 தேர்தலில் விஜய் வெற்றிப் பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. இதனை எழுதி வைத்துக்கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளார். முன்னதாக, தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர் கலந்துகொண்டார்.