விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் அக்டோபர்.27 ஆம் தேதி நடைபெறவுள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட்ட 33 நிபந்தனைகளை மீண்டும் சுட்டிக்காட்டி காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது.
மேலும் அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட காவல் துறை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே த.வெ.க மாநாட்டிற்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து இன்று (செப்டம்பர் 26) அக்கட்சி அவசரமாக கூடி ஆலோசனை நடத்த உள்ளது . சென்னையை அடுத்த பனையூரில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமை தாங்கவுள்ளார்.




