விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22ஆம் தேதி விஜய்யின் தவெக மாநாடு நடக்கவுள்ளது. மாநாட்டை முன்னிட்டு கட்சிக்கொடி, கொள்கைகள், தீர்மானங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில், தவெகவில் இணைய திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, பாமக, நாதக, தேமுதிக நிர்வாகிகள் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், MLA, MPக்கள் 12 பேரை தவெகவில் இணைத்துக்கொள்ள விஜய் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.