தளபதி விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஹீரோ யார் என்பது குறித்து மோஷன் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வரும் நடிகர் விஜயின் கடைசி படமான தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்துடன் அவருடைய சினிமா கெரியர் முடிவுக்கு வரும் நிலையில், அவருடைய மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைக்க இருப்பதாகவும், அதுமட்டுமின்றி அவருடைய தாத்தா போல இயக்குனர் அவதாரம் எடுக்க போவதாக தகவல் ஒன்று வெளியாகி இருந்தது.
மேலும் இந்தப் படத்தை லைக்கா பட நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் யார் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. அதன்படி, சந்தீப் கிஷன் இந்தப் படத்தில் லீட் ரோலில் நடிக்க உள்ளார் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது, ஜேசன் சஞ்சயின் முதல் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில், சந்தீப் கிஷன் மற்றும் ஜேசன் சஞ்சய் இருவரும் உட்கார்ந்தபடி இடம்பெற்றுள்ளது. மேலும் இப்படத்திற்கு தமன் இசையமைப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், இது பணத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்று இந்த மோஷன் போஸ்டர் பார்க்கும்போது தெரிய வந்துள்ளது.