விடிய விடிய பெய்த மழை பள்ளிகளுக்கு விடுமுறை..!!

தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணத்தினால் இன்று தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன்படி கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் பகுதியில் கனமழை பெய்து வருகின்றது. அதன் காரணமாக வால்பாறை பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

இதே போல் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Read Previous

அனைவரையும் ஆச்சரியப்படுத்திய நடிகர் கமலஹாசன்..!! அதே தோற்றம் வேண்டும்..!!

Read Next

ஒரு கோடி ரூபாய் திருடியது 17 வயதுடைய சிறுவனா..? அதிர்ச்சியில் காவல்துறையினர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular