விடுதியில் உணவு சாப்பிட்டு மயக்கம், வாந்தியால் அவதிப்பட்ட 50 மாணவிகள்; சேலத்தில் அதிர்ச்சி சம்பவம்.!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அயோத்தியாபட்டினம் ஆச்சாங்குட்டப்பட்டி  பகுதியில் தனியார் கல்வி நிறுவனத்திற்கு சொந்தமான நர்சிங் கல்லூரி ஒன்று இங்கு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.

வெளியூரிலிருந்து வரும் மாணவிகள் தங்கி படிக்க பிரத்தியாக விடுதி வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று உணவு சாப்பிட்ட 50 பேர் அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்ட அவதிபட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் மருத்துவ சிகிச்சைக்கு பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விடுதியில் சமையல் கூடம் அனுமதி இன்றி செயல்படுவதை உறுதி செய்தனர்.

மேலும் குடிநீருடன் கழிவு நீர் கலந்து அதனை பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. உணவு மாதிரிகளும் அதிகாரிகளால் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் சக மாணவிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

சென்னையில் ஸ்ரீ தேவிக்கு பிடித்த இடத்தில் உறவினருடன் மகள் செய்த செயல்.!! வைரல் போட்டோ.!!

Read Next

ஆட்டோ ஓட்டுநர் வெட்டிக்கொலை..!! தாம்பரம் பேருந்து நிலையத்தில் நடந்த பரபரப்பு சம்பவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular