
நம்முடைய எதிரி யார் என்ற கேள்விக்கு முயற்சி இல்லாத சோம்பலே நம்முடைய எதிரி என்கிறார் ஆதிசங்கரர்…
சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல வேலை இருக்கும் போது அந்த வேலையை செய்ய விரும்பாமல் இருப்பதும் செய்யாமல் இருப்பதும் தான் சோம்பல் வேலை இல்லாத போதும். நல்ல பலனை தரக்கூடிய ஏதாவது ஒரு வேலையை எடுத்துக் கொண்டு அதை செய்ய முனையாமல் இருப்பதும் சாம்பல் தான். எந்த ஒரு உருப்படியான வேலையும் செய்யாமல் சோம்பேறித்தனமாக வெட்டி பேச்சிலும் கிண்டல் பேச்சிலும் அரசியல் சர்ச்சிலும் தூக்கத்திலும் பொழுதை மீனே கழிப்பதனால் எந்த ஒரு உயர்ந்த நிலையும் எட்டிப் பிடிக்க முடியாது. ஒருவன் சோம்பேறித்தனமாக இருப்பது தன்னை தானே கொலை செய்து கொள்வதற்கு ஈடாகும் என்கிறார் செஸ்டர்பீல்ட். நாம் ஒருநாள் பொழுதை சோம்பேறித்தனமாக கழித்து விட்டால் நம்மை கேட்காமலேயே அடுத்த நாளையும் திருடிக் கொள்ளும் அதனால் எப்போதும் சுறுசுறுப்போடு ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும். மினிமினி பூச்சி சிறகை அடித்து பறக்கும்போது தான் பல பலவென்று வெளிச்சம் வருகிறது அதை போல் நாம் சுறுசுறுப்போடு செயலாற்றும்போதுதான் நம்முடைய வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் சோம்பேறி யார் என்பதற்கு சாக்ரடீஸ் ஒரு அருமையான விளக்கத்தை தருகிறார். ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டுமல்ல சோம்பேறி இப்போது செய்து கொண்டிருப்பதை காட்டிலும் சிறப்பாக வேலை செய்வதற்கு உரிய திறமையும் வாய்ப்பு இருந்தும் அப்படி செய்யாமல் இருக்கிறவனே அவனும் சோம்பேறி என்கிறார் இந்த வகையில் பார்க்க போனால் நம்மில் பலர் சோம்பேறிகளாக தான் இருக்கிறோம். ஓடுகின்ற ஒவ்வொரு நொடியும் உருப்படியாக கழிக்க வேண்டிய அவசியம் நம்மிடம் உண்டு நமக்கு நேரத்தை வீணாக்காமல் சுறுசுறுப்பாக இயங்கும் மனப்பான்மை இறந்து விட்டாலே போதும் நாம் வெற்றியின் அருகில் நெருங்கி விட்டோம் என்று தான் பொருள். இன்று செய்து முடிக்க வேண்டிய வேலைகளை நாளைக்கு தள்ளி போடக்கூடாது இந்த பழக்கம் இன்றைக்கு சாப்பிட வேண்டியதை சேர்த்து நாளைக்கு சாப்பிட்டுக் கொள்கிறேன் என்பது போன்றது நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணமே சோம்பலினால் ஏற்படுவது தான். சாம்பல் அது நம்மிடம் விருந்தினர் போல் தான் வரும் நாம் கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும் நம்மிடம் நிரந்தரமாக ஒட்டிக் கொள்ளும் விதைக்கும் காலத்தில் வீண் பொழுது கழித்தால் அறுவடை காலத்தில் நாம் அழ வேண்டி இருக்கும். நடப்பது நடக்கட்டும் என்பது சோம்பியர்களின் தத்துவம் இப்படி தான் இது நடக்க வேண்டும் என்று தோள்களை தட்டி துடித்தெழ வேண்டும். சோம்பித்திரிந்தால் தேம்பி தெரிய வேண்டும் சோம்பேறிகளுக்கு நரகத்தில் கூட இடம் கிடையாது என்பது ரஷ்ய நாட்டு பழமொழி…!!