
கொண்டாடவே கொரோனா…! வித்தியாசமாக சிந்திக்கும் சீனர்கள்…!
சீனர்கள் கொரோனா தொற்றை விரும்பி வரவழைத்து கொள்ள தொடங்கியுள்ளனர். இதற்கான காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. கொரோனாவை உலகிற்கு பரிசளித்த சீனாவை கோவிட் 19 வைரஸ் தற்போது அலை அலையாய் தாக்க தொடங்கிவிட்டது. முன்பு போல கடும் கட்டுப்பாடுகளை விதிக்க சீன அரசுக்கு எதிராக மக்கள் கொந்தளித்ததால் அவற்றை அரசும் விலக்கி விட்டது.
இந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது கோவிட் 19 வைரஸ். இதனால் கொரோனா நோயாளிகள் குவிந்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. மருந்துகள் இல்லாமல் கொரோனா நோயாளிகள் தவித்து வருகின்றார்கள். இதற்கிடையே சீன இளைஞர்கள் தங்களுக்கு கொரோனா தொற்றை கூட்டம் கூட்டமாக சென்று வரவழைத்துக் கொள்கின்றன என்கிற தகவல் உலக நாடுகளை அதிர்ச்சியில் உரைய வைத்துள்ளது.
இதற்கான காரணம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது சுன்யுன் என்கிற வசந்தகால விழா சீன புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்கியுள்ளது. இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஜனவரி 22ஆம் தேதி முதல் ஒரு வாரம் மட்டுமே அந்நாட்டு அரசு விடுமுறை அளித்துள்ளது. இருந்தாலும் 40 நாட்கள் இந்த புத்தாண்டை சீனர்கள் குடும்பத்தினர்களோடும் உறவினர்களோடும் கொண்டாடி மகிழ்வார்கள்.