
அசைவ உணவுகளில் அனைவரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது மட்டன் கறிதான். இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணும் வகையில் சுவை கொடுக்கப்பட்டிருக்கும்.
பெரும்பாலான வீடுகளில் மட்டனை வைத்து குழம்பு, வறுவல், சுக்கா, பிரியாணி என்று சமைப்பது தான் வழக்கம். இதை வித்தியாசமாக எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- மட்டன் – 1/2 கிலோ
- மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
- மட்டன் மசாலா தூள் – 3 டீஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கிய
- பூண்டு – 2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி – 10
- கிராம்பு – 2
- இலவங்கப்பட்டை – 2
- பெருஞ்சீரகம் – சிறிதளவு
- ஏலக்காய் – 2
- பிரிஞ்சி இலை – 2
- எண்ணெய் – தேவையான அளவு
- கறிவேப்பிலை – இரண்டு கொத்து
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- உப்பு – தேவைக்கேற்ப
செய்யும் முறை
முதலில் மட்டனை சுத்தம் செய்து அதை கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்க வேண்டும். பின்னர் மட்டனுடன் மஞ்சள் தூள், மட்டன் மசாலா தூள், இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இதை ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதை குக்கரில் போட்டு 4 விசில் வரும் வரை வேகவைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் பிரிஞ்சி இலை, கிராம்பு, இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் வறுக்கவும்.
இதை ஒரு நிமிடம் வறுக்க வேண்டும். இது பொன்னிறமாக வதக்கியதும் வேகவைத்த மட்டனை தண்ணீரோடு சேர்த்து நன்கு கலந்து விட்டுக்கொள்ளுங்கள்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் தெளித்து குறைந்த தீயில் 8 நிமிடங்களுக்கு சமைக்கவும். இப்படி செய்து எடுத்தால் மட்டன் கிரேவி தயார்.