வித்தியாசமான முறையில் மீன் தொக்கு செய்வது எப்படி..!! வாங்க தெரிந்து கொள்ளலாம்..!!

  • மீன் பிரியர்களே இதை செய்து சாப்பிட்டு பாருங்க.!

பொதுவாகவே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே மீன் என்றாலே விரும்பி சாப்பிடுவதுண்டு. மீனை நம் குழம்பு வைத்து அல்லது பொரித்து தான் சாப்பிட்டு இருப்போம்.

தேவையான பொருட்கள்:

  1. முள்ளில்லாத மீன் – 10 துண்டுகள்
  2. தக்காளி – 4
  3. காய்ந்த மிளகாய் – 3
  4. வெங்காயம் – 7
  5. மஞ்சள் தூள்– 1 டீஸ்பூன்
  6. சீராக தூள் – 1 டீஸ்பூன்
  7. மிளகாய் தூள் – கால் டீஸ்பூன்
  8. தனியார் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  9. தயிர் – 1 கப்
  10. கரம் மசாலா – 2 டேபிள் ஸ்பூன்
  11. இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  12. எண்ணெய் – தேவைக்கேற்ப
  13. உப்பு – தேவைக்கேற்ப
  14. கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை: முதலில் மீனை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் காய்ந்த மிளாகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும். பொன்னிறமானவுடன் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.பின் மாஞ்சால் தூள்.

சீரகத்தூள் மிளகாய் தூள் தனியா தூள் கரம் மசாலா மற்றும் தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் மசாலாவில் இருந்து எண்ணெய் பிரிந்த பின் மீன் துண்டுகளை சேர்த்து மெது கிளற வேண்டும். பின் தயிரை சேர்த்து சற்று கெட்டியானவுடன் இறக்க வேண்டும். இப்பொது சுவையான மீன் தொக்கு தயாராகி விட்டது.

Read Previous

மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் தேவாலய திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்பு..!!

Read Next

ரூ 25 லட்சம் மதிப்புள்ள புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular