வித்தியாசமான முறையில் வாழைப்பழ தோசை செய்வது எப்படி?..

பொதுவாக காலையில் இட்லி ,தோசை ,புட்டு, இடியப்பம் போன்ற உணவுகளை செய்திருப்போம் .

இந்த உணவுகள் நாம் சாப்பிடும் உணவுகளாகும். இதை பெரியவர்கள் சிறியவுர்கள் என எல்லோரும் சாப்பிடுவார்கள். இன்று நாங்கள் உங்களுக்காக வாழைப்பழத்தை வைத்து தோசை செய்வது எப்படி என்பதை பற்றி சொல்ல போகிறோம்.

பொதுவாக நாம் எல்லோரும் வாழைப்பத்தில் பல வகையான உணவுகள் செய்து உண்டிருப்போம். ஆனால் இது வித்தியாசமான முறையில் வாழைப்பழத்தை வைத்து எவ்வாறு தோசை செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • வாழைப்பழம் – 3
  • துருவிய வெல்லம் – 1 கப்
  • துருவிய தேங்காய் – அரை கப்
  • ஏலக்காய் துள் – அரை தேக்கரண்டி
  • நறுக்கிய முந்திரி பருப்பு – 1 தேக்கரண்டி
  • உப்பு – தேவையா
  • பேக்கிங் பவுடர் – அரை தேக்கரண்டி
  • கோதுமை மா – 1 கப்
  • பால் – 1 கப்

செய்யும் முறை:

முதலில் வாழைப்பழத்தை வட்டவட்டமாக மெல்லியதாக வெட்டி கொள்ள் வேண்டும். வெட்டிய வாழைப்பழங்களை ஒரு கோப்பையில் மாற்றவும். பின்னர் அதனுடன் வெல்லம், தேங்தாய், ஏலக்காய் துள், நறுக்கிய முந்திரி பருப்பு, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பை சேர்த்து நன்கு கலக்கவும்.

இது எல்லாம் நன்றாக மிக்ஸ் செய்த பின் எடுத்து வைத்திருக்கும் கோதுமை மாவை சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும். மாவு தோசை ஊற்றும் பதத்திற்கு வர வேண்டும் என்பதற்காக பால்சேர்த்து நன்றாக கலக்கவும்.

பின்னர் ரொம்ப கெட்டியாகமலும் தண்ணியாகாமலும் தோசை ஊற்றும் பதத்தில் மிக்ஸ் செய்து பத்து நிமிடத்திற்கு வைக்க வேண்டும். பின்னர் ஒரு பேனில் கொஞ்சமாக நெய் தடவிய பின்னர் வாழைப்பழ தோசை மாவை ஒரு கரண்டி அளவில் ஊற்றி வேகவைக்க வேண்டும்.

தோசையை திருப்பிபோடும் போது கொஞசமாக நெய் சேர்த்து இறக்கினால் சுவையான வாழைப்பழ தோசை தயார்.

Read Previous

சிறுமியை மிரட்டி தன் கையை அறுத்த காதலன் எனக்கு நீ தான்டா வேணும் என்ற சிறுமி போலீஸ்கிட்ட போக்ஸ் வாங்கினதே போதும்…!!

Read Next

கடுமையான இதய இரத்தக் குழாய் அடைப்பு நீங்க எளிமையான இயற்கை வீட்டு மருத்துவம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular