தற்சமயம் சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்வுகள் நடந்து வந்துள்ள நிலையில், 20க்கும் மேற்பட்ட மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கியதாக செய்தி வந்துள்ள நிலையில் தற்போது கூட்ட நெரிசலில் உயிரிழந்துள்ள மக்களுக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்…
இந்திய விமான படையின் சாகச நிகழ்ச்சியின் போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக வெற்றி கழக கட்சி தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார் இந்த நிகழ்ச்சியின் போது அடிப்படை வசதிகள் போக்குவரத்து வசதிகள் பாதுகாப்பு உள்ளிட்டவை மீது அரசு போதுமான கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை தேவைகளை செய்வதில் கவனம் செலுத்தவில்லை என கூறப்படுகிறது, மக்கள் அதிக அளவில் கூடுகிற இடங்களில் அடிப்படை தேவைகளை செய்வதில் இனி வரும் காலங்களில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார், மேலும் தமிழக அரசு மக்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்களுக்கு தேவையான முதல் உதவிகளை கூட்டம் கூடுகிற இடத்தில் முன்கூட்டியே வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் மேலும் சாகச நிகழ்வின்போது உயிரிழந்துள்ள மக்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழக வெற்றிக்கான கட்சியின் தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்..!!




