திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் போக்குவரத்து கழகம் சார்பில் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் இன்று செயல்படுத்தப்பட்டது. அதாவது பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வரும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறு ஏற்படாமல் இருக்க அரசு அவர்களின் நலன் கருதி இம்முடிவை எடுத்தது.
அதன் அடிப்படையில் இன்று பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம், ஸ்ரீரங்கம், நம்பர் ஒன் டோல்கேட் ஆகிய இடங்களுக்கு பேருந்து இயக்கத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் த.கே.என் நேரு அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இதனால் விமான நிலையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் விமான பயணிகள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.