மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வாயு கசிவு காரணமாக சுமார் 39 பயணிகள் நோய்வாய்ப்பட்டனர். விமான நிலையத்தின் தெற்கு ஆதரவு மண்டலத்தில் உள்ள Sepang Aircraft Engineering Facility இல் வாயு கசிவு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் சிலாங்கூர் தீயணைப்புத் துறையினர் உடனடியாக உஷார்படுத்தப்பட்டு எரிவாயு கசிவைத் தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.