கோலாலம்பூர் பன்னாட்டு விமான நிலையத்தில் விமான பொறியியல் பணியகத்தில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த வாயு கசிவால் 39 ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தற்பொழுது தெரிவித்துள்ளனர்.
பயணிகள் நிலையத்தில் இருந்து தனித்து இருக்கும் விமான பொறியியல் பணியகத்தில் பணியாற்றி வந்த வெவ்வேறு நிறுவனங்களை சார்ந்த ஊழியர்கள் இந்த வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த வாயு கசிவு ஏற்பட்டதால் ஊழியர்களுக்கு திடீரென்று மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 17 பேர் விமான நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .மேலும் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வாயு கசிவால் பயணிகள் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் நீர்ம பெட்ரோலிய வாயுவில் சேர்க்கப்படும் மெத்தில் மெர்காவுடன் என்கின்ற வாயு உபயோகிக்கப்படாத கடனிலிருந்து கசிந்ததாக கண்டறியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.