
வியர்க்குரு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கான சிறந்த தீர்வு இதுதான்..!!
கோடை காலம் மற்றும் வெயில் காலங்களில் பலருக்கும் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு உடல் வெப்பம் தாங்க முடியாமல் வியர்க்குரு போன்ற பிரச்சினைகள் வரும். இந்நிலையில் வியர்க்குரு பிரச்சனையை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
வியர்க்குரு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேவையான அளவு நீரை குடிப்பது மிகவும் அவசியமான ஒன்று. உடல் குளிர்ச்சியாக இல்லாமல் சூடாக இருந்தால் தான் இந்த மாதிரியான பிரச்சினைகள் வரும். அதற்கு நீர் சம்பந்தமான பழங்களை சாப்பிடுவது நல்ல தீர்வாக இருக்கும். குறிப்பாக இளநீர் மோர் பழைய கஞ்சி தர்பூசணி வெள்ளரிக்காய் போன்ற பழங்களை சாப்பிடுவது நல்லது. வியர்வையில் இருந்து வெளியேறும் பாக்டீரியாவால் தான் வியர்க்குரு பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் தினமும் மூணு வேளை குளிப்பதால் உடலில் இருக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வியர்குருவில் இருந்து நாம் தப்பிக்கலாம்.