IND vs BAN 2024: விராட் கோலியின் சாதனையை முறியடித்த ஹர்திக் பாண்டியா..!! வெளியான முக்கிய அப்டேட்..!!
இந்திய ஆடவர் அணியானது பங்களாதேஷுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டி நேற்று(அக்டோபர் 6) நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியின் மூலம் இந்திய வீரர் விராட் கோலியின் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடித்துள்ளார்.
அதாவது சர்வதேச T20 போட்டிகளை அதிக முறை (5) சிக்ஸருடன் முடித்து வெற்றி பெற வைத்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை ஹர்திக் பாண்டியா முறியடித்துள்ளார். இப்பட்டியலில் விராட் கோலி 4 முறை, தோனி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் 3 முறை போட்டியை சிக்ஸருடன் முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




