T20 உலக கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது சர்வதேச T20 கிரிக்கெட்டில் அதிக பவுண்டரிகள் அடித்த இந்திய வீரர் என்ற பட்டியலில் விராட் கோலியை பின்தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளார். விராட் இதுவரை 105 பவுண்டரிகளை அடித்து இருந்தார். அதை முந்திய ரோகித் 113 பவுண்டரிகளை அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.